என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கு வாபஸ்"
- மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் யுவராஜூடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீவானம்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் பிரபுவுக்கு கோர்ட்டு உத்தர விட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் பிரபு நேற்று இரவு சத்யாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை கைது செய்தனர்.
சென்னை வடபழனி சோமசுந்தர பாரதிநகர் சங்கம் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் டேபிள், சேர், பாத்திரம், சாமியானா பந்தல் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறேன். கடையின் மேல்தளத்தை அதிமுக வத்தலக்குண்டு ஆறுமுகம் நினைவு மன்றத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.
தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியா கூறியதாக அவரது ஆட்கள் புதூர் உதவியா, கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னிடம் கேட்டனர். நான் தற்போது பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றேன்.
அவர்கள் பணம் தரவில்லை என்றால் உனது கடையை எங்கள் கட்சி அலுவலகமாக மாற்றி விடுவோம் என்று மிரட்டினார்கள். பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி எனது கடையை பூட்டி பொருட்களை அடித்து நொறுக்கினார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி நான் வெளியூர் சென்றிருந்தபோது சத்தியா எம்எல்ஏ கூறியதாக கோகுல், பாலசுப்பிரமணியன், புதூர் உதயா ஆகியோர் எனது கடையை உடைத்து பொருட்களை வெளியே எடுத்து போட்டு ரூ.76 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி சத்தியா எம்எல்ஏ, கோகுல், பாலசுப்பிரமணி, புதூர் உதயா ஆகியோர் வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து என்னிடம் வந்து வழக்கை வாபஸ் வாங்கு மாறும் இல்லாவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்து என் கடையை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி (வயது 35) என்பவரது குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் காமாட்சி குடும்பத்தில் ஒருவரை கைது செய்தனர்.
சம்பவத்தன்று காமாட்சி, வனிதா (25), அமராவதி (55) ஆகிய 3 பேரும் முனீஸ்வரி வீட்டுக்கு சென்று போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளனர். அதற்கு முனீஸ்வரி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் முனீஸ்வரியை தாக்கி கீழே தள்ளினர். மேலும் வீட்டு கூரையை உடைத்து சேதப்படுத்தி பொருட்களையும் சூறையாடினர். இது குறித்து முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வீட்டை சூறையாடிய வனிதா உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்